கிருஷ்ணகிரியில் நடைபெற்ற எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் ஏராளமானவர்கள் பங்கேற்பு.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் ஏராளமானவர்கள் பங்கேற்பு.
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பாக எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் நாட்டுபுற கலைநிகழ்சிகள் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணியை வட்டாட்சியர் ரமேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் பள்ளி கல்லூரிகளை சேர்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டு எயிட்ஸ் குறித்த பொது மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்கள்.
புதிய பேருந்து நியைம் அருகில் இருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு மாரத்தான் லண்டன் பேட்டை, பெங்களுர் சாலை, 5 ரோடு வழியாக சென்று ராயக்கோட்டை சாலை வழியாக சென்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முடிவடைந்தது.
இதனையடுத்து மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வட்டாட்சியர் ஊக்கப்பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள், கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை மண்டல திட்ட மேலாளர் பாலமுருகன் சிறப்பாக செய்து இருந்தார்.
செய்தியாளர்
மாருதி மனோ