அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாம் .!

கிருஷ்ணகிரி

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாம் .!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள்,  நேரில் பார்வையிட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்குவதற்காக அளவீடு செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டார்.

"நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாமில் 2,734 நபர்கள் பதிவு செய்து மருத்துவ சிகிச்சை பெற்றனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

உடன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சத்திய பாமா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ரமேஷ் குமார், வட்டார மருத்துவ அலுவலர் மரு.சிவகுமார், பர்கூர் பேரூராட்சி தலைவர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ