காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய திமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்..!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், 53 சட்டமன்றத் தொகுதி, காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றியம் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்.
உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அர.சக்கரபாணி ஆலோசனை படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான D. மதியழகன் அவர்களின் வழிகாட்டுதல்படி தொகுதி பார்வையாளர் AC. தேவ்குமார், மாவட்ட துணைச் செயலாளர் B. K கோவிந்தசாமி, பொதுக்குழு உறுப்பினர் திருமதி சித்ரா சந்திரசேகர் ஆகியோர் வருகை தந்து காவேரிப்பட்டிணம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் N. சரவணன் தலைமையில் கால்வே அள்ளி ஊராட்சியில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மூத்த முன்னோடிகள் BLA 2, BLC, BDA கிளைசெயலாளர் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ