தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதிய சலவையகம் திறப்பு விழா .!
தென்காசி

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதிய சலவையகம் திறப்பு விழா
தென்காசி அக் 01
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வாகன கூடாரத்தில் , புதிய சலவையகம்திறப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின்தலைமை வகித்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
557 படுக்கை வசதி கொண்ட தென்காசி மாவட்ட மருத்துவ மனையின் படுக்கை விரிப்புகளும் துணிகளும் மூன்று பணியாளர்கள் மூலம் கைகளால் துவைத்துக் கொண்டிருந்தனர்.
பணியாளர்களின் பணிச் சுமையை கருத்தில் கொண்டு, மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகையின் மூலம் அதிக திறன் கொண்ட ஹெவி டூட்டி சலவை இயந்திரம் வாங்க முடிவு செய்யப்பட்டது.
மருத்துவமனை நிர்வாகக் குழுவின் ஆலோசனையின் படி, இயந்திரம் வாங்கி பயன் பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந் நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் செல்வ பாலா, எலும்பு முறிவு மருத்துவர்கள் திருமலைக்குமார், ரவிச்சந்திரன் செவிலிய கண்காணிப்பாளர் திருப்பதி, செவிலியர்கள் செந்தாமரை, முத்துலட்சுமி, பிரேமா QPMS மேலாளர் ராமர் மற்றும் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்