உலக இருதய தினத்தையொட்டி தென்காசி எஸ்.பி அலுவலகத்தில் மருத்துவ பரிசோதனை முகாம் .!

தென்காசி

உலக இருதய தினத்தையொட்டி தென்காசி எஸ்.பி அலுவலகத்தில் மருத்துவ பரிசோதனை முகாம் .!

உலக இருதய தினத்தையொட்டி தென்காசி எஸ்.பி அலுவலகத்தில் மருத்துவ பரிசோதனை முகாம்

தென்காசி அக் 01  

உலக இருதய தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மருத்துவ பரிசோதனை முகாம் நடை பெற்றது.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்  அறிவுறுத்தலின் பேரில் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் பயன்பெறும் வகையில் பொது மருத்துவ நிபுணர் செய்யது சுலைமான்  தலைமையிலான மருத்துவ குழுவினர் மாவட்ட காவல் அலுவலகத்தில்  இருதய நோய் தொடர்பான பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்த பரிசோதனை, இரத்தத்திலுள்ள கொழுப்பு பரிசோதனை மற்றும் இசிஜி பரிசோதனை போன்றவை செய்யப் பட்டு, உடல் நலம் பேனவும், இருதய ஆரோக்கியம் குறித்தும் மருத்துவர்களால் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

செய்தியாளர்

AGM கணேசன்