தென்காசி த.வெ.க. மாவட்ட செயலாளர் ராஜ பிரகாஷ் பிறந்தநாள்  விழா.!

தென்காசி

தென்காசி த.வெ.க. மாவட்ட செயலாளர் ராஜ பிரகாஷ் பிறந்தநாள்  விழா.!

தென்காசி த.வெ.க. மாவட்ட செயலாளர் ராஜ பிரகாஷ் பிறந்தநாள்  விழா

தென்காசி, நவ - 30

தமிழக வெற்றி கழகத்தின் தென்காசி மத்திய மாவட்ட செயலாளர் ராஜ பிரகாஷ் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 80 பேர் ரத்த தானம் செய்தனர்

தமிழக வெற்றி கழகம் தொடங்கப் பட்ட  நாளில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு நலத் திட்டங்களை தவெக நிர்வாகிகள் செய்து  வருகிறார்கள்.

இந்த நிலையில் தென்காசி மத்திய மாவட்ட தவெக  செயலாளர் ஜே.ஏ.எஸ்.ராஜ பிரகாஷ்  தவெக கட்சி தொடங்கிய நாளிலிருந்து தென்காசி மத்திய மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார். மேலும் பாவூர்சத்திரம் பகுதியில் இவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொது மக்களுக்கு வழங்கி  வருகிறார்.

இந்த நிலையில் அவரது பிறந்தநாள் விழா பாவூர்சத்திரம் கட்சி அலுவலகத்தில் சிறப்பாக நடை பெற்றது. இதனை முன்னிட்டு  தவெக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 80  பேர் ரத்ததானம் வழங்கி சிறப்பித்தனர். 

மேலும் தவெக தலைவர் விஜய்  வழிகாட்டுதலின்படி இன்னும் பல்வேறு நலத்திட்ட
உதவிகளை நாங்கள் பொது மக்களுக்கு செய்து கொடுக்க இருப்பதாகவும்,
பெண்கள் நன்மதிப்பை பெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் தவெக மகத்தான வெற்றியடையும் இதனை தொடர்ந்து பல்வேறு திட்டங்களை இந்த பகுதிக்கு செய்து கொடுக்க இருப்பதாகவும் தவெக நிர்வாகிகள் கூறினர்.

இதனை தொடர்ந்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர்.

செய்தியாளர்

AGM கணேசன்