தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐ ஏ எஸ் அகாடமியில் முப்பெரும் விழா.!

தென்காசி

தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐ ஏ எஸ் அகாடமியில் முப்பெரும் விழா.!

தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐ ஏ எஸ் அகாடமியில் முப்பெரும் விழா

தென்காசி ஏப்ரல் 21

தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாடமி தமிழகம் முழுவதும் 60 கிளைகளுடன் எண்ணற்ற மாணவர்களுக்கு அரசு பணிகள் வழங்கி சிறப்பான சேவையாற்றி வருகிறது. ஆரம்பித்த 16 ஆண்டுகளில் 15 ஆயிரத்து 985 நபர்களுக்கு மேல் அரசு பணியில் அமர்த்தி வருகிறது தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் டிஎன்பிஎஸ்சி குரூப் வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா, நன்றி தெரிவிக்கும் விழா, இதழ் இதயம் தன்னார்வலராக இணையும் விழா ஆகிய முப்பெரும் விழா தென்காசி இசக்கி மகாலில் வைத்து நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மோட்டிவேஷனல் பேச்சாளர் தமிழ் எழுத்தாளர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் திருவள்ளூர் மாவட்ட துணை ஆட்சியர் ப்ரீத்தி பார்கவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐ ஏ எஸ் அகாடமி நிறுவனரும் மூத்த ஆசிரியருமான ஆகாச மூர்த்தி வரவேற்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் பாரதி பாஸ்கர் பேசும் போது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுக்க வந்த இந்த நிகழ்ச்சி மோட்டிவேஷனலாக அமைந்தது. சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு எளிதாக கிடைக்கும் அனைத்தும் தென்காசி மாவட்ட மாணவர்களுக்கு இவ்வளவு எளிதாக கிடைக்கும் என்றால் அதற்கு இந்த அகடாமியே காரணம் என்றும் பேசினார்.

திருவள்ளூர் மாவட்ட துணை ஆட்சியர் ப்ரீத்தி பார்கவி பேசும்போது குரூப் 4ல் தான் வெற்றி பெற்றோம் என்று எண்ணி இருந்து விடாமல் உங்களின் குரூப்-1 குரூப் 2 கனவையும் இந்த அகாடமி நிறைவேற்றிக் கொடுக்கும் நானும் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் தான். உங்களின் இந்த குரூப் 4 வெற்றி எந்த ஒரு அரசாங்க வேலையும் உங்களை தாண்டி தான் எங்களைப் போன்றவர்களுக்கு அரசாங்க கோப்பு வந்தடையும்.எனவே எதையும் சாதாரணமாக எண்ணாமல் இருக்கும் வேலையில் இருந்து உங்களின் கனவை நினைவாக்க பாடுபட முதல் படிக்கல்லாக எண்ணி உங்கள் பணியை திறம்பட செய்ய வேண்டும் என்று வாழ்த்தினார்.

மாற்றுத்திறனாளிகள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர்களின் குழந்தைகளை அரசு வேலையில் அமர்த்தி அழகு பார்த்த ஆகாஷ் பிரண்ட்ஸ் அகாடமி நிறுவனர் ஆகாஷ் மூர்த்திக்கும் நிர்வாக இயக்குனர் மாரியப்பனும் மாணவர்களுக்கும் பெற்றோர்களும் மரியாதை செய்தது நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நெகிழச் செய்தது .

இந்நிகழ்ச்சியில் தென்காசி ஆலங்குளம் அம்பை கடையும் வள்ளியூர் நாகர்கோவில் ஆகிய தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் அகாடமி தென் மண்டல கிளைகள் மாணவர்கள் ஆசிரியர்கள் பொறுப்பாளர்கள் மற்றும் தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் மாரியப்பன் பொது மேலாளர் செந்தில்குமார் 
தென் மண்டல பொறுப்பாளர் செல்லமுருகன் தென்மேற்கு மண்டல பொறுப்பாளர் பாண்டியராஜா தென்கிழக்கு மண்டல பொறுப்பாளர் சிந்து உள்பட தென்காசி ஆகாஷ் ஐஏஎஸ் அகாடமி அலுவலக பொறுப்பாளர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் நிர்வாக இயக்குனர் மாரியப்பன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்