இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத்தை சந்தித்த டாக்டர் சந்திர மோகன்.!

கிருஷ்ணகிரி

இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத்தை சந்தித்த டாக்டர் சந்திர மோகன்.!

கிருஷ்ணகிரி நகருக்கு வருகை தந்த இந்து மக்கள் கட்சியின் நிறுவனரை சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் நேரில் சந்தித்து மலர்மாலை அணிவித்து வரவேற்றதுடன் வருகின்ற 30 தேதி நடைபெற உள்ள முன்னாள் விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் மற்றும் நலத்திட்ட விழாவிற்கு வருகை தருமாறு டாக்டர் சந்திமோகன் அதற்கான அழைப்பிதழினை வழங்கினார்.

கிருஷ்ணகிரியில் வருகின்ற 30-ம் தேதி விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் மற்றும் சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ்நாடு அரசு முன்னாள் பொது வினியோக திட்ட ஆலோசனைக்குழு உறுப்பினருமான டாக்டர் சந்திரமோகன் ஆகியோரின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஏழைஎளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

இதன் முன்னதாக கிருஷ்ணகிரி நகருக்கு இன்று வருகை தந்த இந்து மக்கள் கட்சியின் நிறுவனரை சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் நேரில் சந்தித்து மலர் மாலை அணிவித்து வரவேற்றதுடன், வருகின்ற 30 தேதி நடைபெற உள்ள முன்னாள் விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் மற்றும் நலத்திட்ட விழாவிற்கு வருகை தந்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வருகை தருமாறு வேண்டி அதற்கான அழைப்பிதழினை டாக்டர் சந்திரமோகன் வழங்கினார்.

அப்போது குகை காளியம்மன் திருக்கோவில் தவத்திரு ஸ்ரீ முருகன் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ

மாருதி மனோ