கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி ஆலோசனைக் கூட்டம். !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் வருகின்ற 11.09.2025,12.09.2025 வெள்ளி,சனிக்கிழமை ஆகிய இரு தினங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி, மாவட்ட கழக செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான D.மதியழகன், MLA வழிகாட்டுதலின்படி 08.09.2025 மாலை 5.30 மணியளவில் காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றிய கழக அலுவலகத்தில், ஒன்றிய அவைத்தலைவர் அறிவொளி இராமமூர்த்தி தலைமையில் ஒன்றிய கழக செயலாளர் க.மகேந்திரன் அவர்களின் முன்னிலையில் ஒன்றிய நிர்வாகிகள்,மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கழகத் தலைவருக்கு எவ்வாறு வரவேற்பு அளிக்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.
திமுக தலைவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் 8 வது ஆண்டில் கழகத் தலைவராக அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில் காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஐரோப்பிய,ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு ரூபாய் 15,516 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து வரலாற்று சிறப்புமிக்க சர்வதேச பயணத்தை முடித்து தாயகம் திரும்பிய கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கபட்டது.
இறுதியாக திமுக தலைவருக்கு நமது ஒன்றியத்தின் சார்பாக மிக சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டுமென ஒன்றிய கழக செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்
மாருதி மனோ