கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த சிறப்பு கூட்டம்.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த சிறப்பு கூட்டம்.!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த சிறப்பு கூட்டம் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தகுதியற்ற  வாக்காளர்களை நீக்க அரசியல் கட்சியினர் உரிய ஒத்துழைப்பு வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர்களின்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குரள், ஒசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி, துணை ஆட்சியர் அபிநயா, வருவாய் கோட்டாச்சியர் ஷாஜஹான் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர்கள் கலந்துக் கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் தளி, ஓசூர், வேப்பனஹள்ளி, பர்கூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தபணிகள் மேற்கொள்ளப்படஉள்ளது. இப்பணிகள் தொகுதி வாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையிலும் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர்கள் முன்னிலையில் நடத்தப்பட உள்ளது. இந்தப் பணிகளில் வாக்காளர் பட்டியலில் தவறுதலாக பெயர்கள் இடம் பெற்று இருந்தால் அவர்களின் பெயர்கள் நீக்கப்படும் எக்காரணம் கொண்டு தகுதியான வாக்காளார் பெயர்கள் நீக்கப்பட மாட்டாது.

குறிப்பாக தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் விடுப்பட்டு இருந்தால் அவர்களின் பெயர்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் இப்பணிகளில் அங்கிகரிக்கப்பட்ட கட்சியினர் தகுந்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ஆட்சியர் தினேஷ்குமார் கேட்டுக் கொண்டார்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர்களான திருமதி கீதா ராணி, ரமேஷ் மற்றும் தளி திமுக சட்ட மன்ற உறுப்பினர் பிரகாஷ், காங்கிரஸ் கட்சியின் திட்ட குழு உறுப்பினர் ரகு, மாநில பேச்சாளர் ஜேசு துரைராஜ், நகர தலைவர் லலித் ஆண்டனி, தேசிய வாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்டத் தலைவர் சந்திரமோகன், அதிமுக கட்சியின் நகர செயலாளர் கேசவன், பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தசாமி, தேமுதிக கட்சியின் ஒன்றிய செயலாளர் முருகன், பொதுச் செயலாளர் ரோஷன் ரஷீத், ஜெய்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ