உலக நீர் தின பயிற்சி பட்டறை துவக்க விழா.!
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகா உசிலம்பட்டி ஆர் வி எஸ் வேளாண்மைக் கல்லூரியில் பாரதிய கிருஷக் சமாஜ் மற்றும் ஆர் வி எஸ் வேளாண்மைக் கல்லூரி இணைந்து நடத்திய இரண்டு நாள் உலக நீர் தின பயிற்சி பட்டறை துவக்க விழா கல்விக் குழுமத்தின் ஆலோசகர் பாரி தலைமையில் நடைபெற்றது.
இதில் கல்வி குழுமத்தின் தலைவர் குப்புசாமி பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார். வழக்குரைஞர் குருசாமி பயிற்சி விளக்க உரையாற்றினார். இயற்கை வேளாண்மை பயிர் உயர்மட்ட குழு உறுப்பினர் முனைவர் கிருஷன் பீர் சௌந்தரி சிறப்புரை ஆற்றினார். முன்னதாக கல்லூரி இயக்குனர் முனைவர் பாண்டியராஜன் வரவேற்றார். ஜி.எஸ்.தனபதி நன்றி கூறினார்.
செய்தியாளர்
பாபநாசம் இன்பம்
