கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆதிசங்கரர் நகரில் நடைபெற்ற கன்றுவிடும் விழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆதிசங்கரர் நகரில் நடைபெற்ற கன்றுவிடும் விழாவில் 200 கன்றுகள் பங்கேற்பு. குறிப்பிட்ட தூரத்தினை விரைவாக கடந்த கன்றுகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆதிசங்கரர் நகரில் ஓம் ஸ்ரீ தர்மசாஸ்தா மணிகண்டன் ஆலயத்தின் அறக்கட்டளை சார்பாக கன்று விடும் திருவிழா நடைபெற்றது.

இந்தக் கன்று விடும் விழாவில் ஆந்திர மாநிலம் குப்பம், வேப்பனஹள்ளி, காவேரிப்பட்டினம், பர்கூர், கப்பல் வாடி,
மல்லப்பாடி, ஒசூர், வாணியம்பாடி திருவண்ணாமலை, திருப்பத்தூர் , தர்மபுரி, வேலூர், ஊத்தங்கரை, மடத்தானூர், கல்லாவி, பாகலூர், தின்னூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 கன்றுகள் பங்கேற்றிருந்தன, வாடிவாசலுக்கு கொண்டு வரப்பட்டு, ஒவ்வொரு கன்றுகளாக அவிழ்த்து விடப்பட்டது.
இதில்100 மீட்டர் தூரத்தை மிக குறைந்த நேரத்தில் விரைவாக கடந்த கன்றுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை, வழங்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் பல்வேறு பரிசுகள் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் ஏராளமான இளைஞர்கள் மத்தியில் அவிழ்ந்து விடப்பட்ட கன்றுகளை இளைஞர்கள் தட்டி உற்சாகப்படுத்தினர்.

இந்த கன்று விடும் விழாவிற்கான ஏற்பாடுகளை ஆதிசங்கரர் நகர் பகுதியைசேர்ந்த ஓம் ஸ்ரீ தர்மசாஸ்தா மணிகண்டன் ஆலயத்தின் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
