பெரியார் பல்கலைக் கழகத்தில் வணிக நிர்வாகவியலில் முதலிடம் பிடித்த ஒசூர் மாணவி ஆளுநரிடம் விருது பெற்றார்.!
கிருஷ்ணகிரி
பெரியார் பல்கலைக் கழகத்தில் வணிக நிர்வாகவியலில் முதலிடம் பிடித்த ஒசூர் மாணவி ஆளுநரிடம் விருது பெற்றார். ஒசூரில் முன்னாள் அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற மாணவி.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த ஜீமங்கலம் கிராமத்தை சேர்ந்த அர்ச்சனா ஒசூரில் உள்ள சென்ட் ஜோசப் மகளிர் கலைக்கல்லூரியில் படித்து வந்த நிலையில் வணிக நிர்வாகவியல் கணினி பயன்பாட்டியல் பிரிவில் பெரியார் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்ததால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

இந்தநிலையில், ஜீமங்கலம் கிராமத்தில் உள்ள முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பாலகிருஷ்ணா ரெட்டி அவர்களையும், அவரது துணைவியார் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி அவர்களை நேரில் சந்தித்த மாணவி அர்ச்சனா தான் பெற்ற சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார் .
செய்தியாளர்
மாருதி மனோ
