தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான நிலங்களை மீட்டுக்கும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி. தங்கபாலு தலைமையிலான குழு .!

கிருஷ்ணகிரி

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான நிலங்களை மீட்டுக்கும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி. தங்கபாலு தலைமையிலான குழு .!

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான காந்திஜி நூற்றாண்டு மண்டபத்திற்கு சொந்தமான நிலத்தினை ஆய்வு மேற்கொள்ள வந்த காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழுத் தலைவர் கே.வி. தங்கபாலு அவர்களுக்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான நிலங்களை மீட்டுக்கும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி. தங்கபாலு தலைமையிலான குழு அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான நிலங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான  நூற்றாண்டு காந்திஜி மண்டபத்திற்கு சொந்தமான நிலத்தினை காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழுத்தலைவர் கே.வி. தங்கபாலு மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு துறையின் பொருளாளர் நிதின் கும்பல்கர், தமிழக பொதுச் செயலாளர் செல்வம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி ஆகியோருக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் காவேரிப்பட்டினத்தில் புதர் மண்டிய நிலையில் காணப்படும் காந்திஜியின் நூற்றாண்டு மண்டபத்திற்கு சொந்தமான நிலத்தினை ஆய்வு மேற்கொண்டார்..

அப்போது காங்கிரஸ் கட்சி மற்றும் காந்திஜி மண்டபத்திற்கு சொந்தமான நிலத்திற்கான ஆவணங்களை காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன்
காங்கிரஸ் கட்சியின் சொத்து ஆவணங்கள் அடங்கிய ஆவணங்களை காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழுத்தலைவர் கே.வி. தங்கபாலு  அவர்களிடம் வழங்கினார்.

அப்போது பேசிய கே வி.தங்கபாலு அவர்கள்.....
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலங்களை மீட்டெடுக்கும் பொருட்டு மாவட்டங்கள் தோறும் சுற்றுபயணம் மேற்கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்து அந்த சொத்துக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.

அதன்படி காவேரிப்பட்டினத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த காந்திஜி நூற்றாண்டு மண்டபத்தினை ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

இதன் முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்டம் வருகை தந்த
காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுத்தலைவர் கே.வி. தங்கபாலு அவர்களுக்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினருமான எல்.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் மாவட்ட எல்லைப் பகுதியான சப்பாணிப்பட்டியில் கொடி தோரணங்கள் கட்டி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மாவட்டத் தலைவர்களான ராஜா குமாரவேல், ஜேசு துரைராஜ், கிருஷ்ணமூர்த்தி, நாரயணமூர்த்தி, மாநில செயலாளர் ஆறுமுகம், முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் முத்து, கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் ரகமத்துல்லா, கிருஷ்ணகிரி கிராம கமிட்டி பொறுப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ரகு,  வட்டாரத் தலைவர் தனஞ்செயன், முன்னாள் நகர தலைவர்கள் வின்சென்ட், தக்காளி தவமணி, நகர தலைவர் லலித் ஆண்டனி, மாவட்ட செயலாளர் சங்கர், மீனவரணி தலைவர் செல்வம், ஓ.பி.சி. மாவட்டத் தலைவர் கவியரசன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராமசந்திரன், சரவணன், ரமேஷ் அர்னால்டு ஹரி, டாக்டர் தகி,லோக நாதன், ராதாகிருஷ்ணன் மாரியப்பன், சத்தி, சென்னப்பன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

மாருதி மனோ