பர்கூர் காவல் சரகத்தில் புதியதாக பொருத்தப்பட்ட 72 சி சி டிவி கேமராக்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.!

கிருஷ்ணகிரி

பர்கூர் காவல் சரகத்தில் புதியதாக பொருத்தப்பட்ட 72 சி சி டிவி கேமராக்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் காவல் சரகத்தில் புதியதாக பொருத்தப்பட்ட 72 சி சி டிவி கேமராக்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பர்கூர் காவல் நிலைய சரகத்தில் புதிதாக பொருத்தப்பட்ட 72 சிசிடிவி கேமராக்கள், ஜெகதேவியில் 4 கேமராக்கள், காட்டூர் எல்லையில் 4 கேமராக்கள் என மொத்தம் 80 சிசிடிவி கேமராக்களை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி பர்கூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சிசிடிவி கேமராக்களை துவக்கி வைத்தனர்.

பின்னர் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் பர்கூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும், நகர மற்றும் கிராமப்பகுதிகளில் முக்கிய இடங்களான கூட் ரோடு மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என கண்டறியப்பட்ட 80 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இக்கேமராக்கள் அனைத்தும் போலீஸ் ஸ்டேசனில் இருந்து கண்காணிக்கப்படுகிறது என தெரிவித்தார்.

இதையடுத்து பர்கூர் பேரூராட்சி எம்ஜிஆர் நகர் இருளர் காலனியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் டி.எஸ்.பி.முத்துகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் இளவரசன், தாசில்தார் சின்னசாமி, பேரூராட்சி தலைவர் சந்தோஷ் குமார், இன்ஸ்பெக்டர்கள் கஸ்தூரி, பாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ