ஆவின் மகளீர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் உள்ள உறுப்பினர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான போனஸ் தொகை.!

கிருஷ்ணகிரி

ஆவின் மகளீர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் உள்ள உறுப்பினர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான போனஸ் தொகை.!

கரகூர் ஆவின் மகளீர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் உள்ள உறுப்பினர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான போனஸ் தொகையினை தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராம கவுண்டர் வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கரகூர் ஆவின் மகளீர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு 2024 - 2025-ம் ஆண்டுக்கான போனஸ் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

சங்கத்தின் முன்னாள் தலைவர் திருமதி மகேஷ்வரி ராமகவுண்டர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு சங்கத்தின் செயலாளர் வரவேற்புரை ஆற்றினார். சங்கத்தின் துணைத் தலைவர் திருமதி ராணி முன்னிலை வகித்தார்.

மேலும் இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளாராக தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் ராமகவுண்டர் கலந்து கொண்டு சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் பால் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பால் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரை வழங்கினார்,

மேலும்  தமிழக அரசு பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.15 உயர்த்தி வழங்கவேண்டும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய பாலுக்கான மானியம் அவர்களது வங்கி கணக்கில் இன்னும் வந்து சேரவில்லை எனவும் இதற்கு மாவட்ட நிர்வாகமும் ஆவின் நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து பாலுக்கு உண்டான மானியத்தை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து கரகூர் ஆவின் மகளீர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் உள்ள உறுப்பினர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான போனஸ் தொகையினையும் வழங்கிப் பாராட்டினர். அப்போது சங்க உறுப்பினர்களான மோகனா, உமாராணி, விஜயா லட்சுமி, கனகவள்ளி, அம்பிகா, ராதாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

கூட்டம் முடிவில் உமாராணி நன்றி கூறினார்.

செய்தியாளர் 

மாருதி மனோ