கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் .!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் .!

கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு பால் இறக்குமதிக்கு அனுமதி அளித்த மத்திய அரசின் விவசாயிகள் விரோதப் போக்கை கண்டித்து நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பாலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

கிருஷ்ணகிரி ஆவின் ஒன்றியத்தின் முன்பாக தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் அமெரிக்காவில் இருந்து பால்  கொள்முதல் செய்ய அனுமதி அளித்த மத்திய அரசின் போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில ஆலோசகர் கண்ணையா, பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் மாவட்ட பொதுச் செயலாளர் அனுமந்தராசு, கிழக்கு மாவட்ட தலைவர் வரதராஜ், மேற்கு மாவட்ட துணை செயலாளர் கண்ணப்பன், மாரியப்பன் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்,

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக....

ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலம் போல் பால் உற்பத்தி மானியமாக லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 6. வழங்க வேண்டும், மாட்டுத்தீவனங்களில் விலை உயர் வினைக்கருத்தில் கொண்டு லிட்டருக்கு கூடுதலாக ரூ 15 உயர்த்தி வழங்கப்பட வேண்டும், மாடுகளுக்கு இலவச காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டும். ஆவின் கூட்டுறவு ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு தொடக்க சங்க பணியாளர்களையே கொண்டு நியமனம் செய்யப்பட வேண்டும், அமெரிக்காவில் இருந்து பால் இறக்குமதியை தடை செய்யப்பட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் இராமகவுண்டர்....... 
தமிழக அரசு ஆவின் தொடக்க சங்க பால் உற்பத்தியாளர்களின் பணி ஓய்வுக்கு பிறகு ரூ.1000 வழங்குவதை தமிழக விவசாயிகள் சங்கம் பாராட்டுகிறது, 
அதுபோல ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு ரூ.3000 வழங்க தமிழக அரசு பரிசிலினை செய்ய வேண்டும், இந்திய விவசாயிகளின் வாழ்வாதரத்தை சிதைக்கும் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் பால் மற்றும் வேளாண்மை பொருள்களுக்கு வரி இல்லாமல் இறக்குமதி செய்வதனால் ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து விடும் ஆகையால் மத்திய அரசு உடனடியாக அமெரிக்காவுடனான இந்த வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், இல்லையேல் ஒரு போதும் அமெரிக்கா பாலை இந்தியாவுக்கு இறக்குமதியை அனுமதிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டார்.

அப்போது தமிழக விவசாயிகள் சங்கத்தினை சேர்ந்த மத்திய மாவட்டத் தலைவர் வேலு, மற்றும் விவசாய சங்கத்தினை சேர்ந்த ராஜா, சீனிவாசன், பாலாஜி, சக்திவேல், செல்வராசு, முருகேசன், வெங்கடேசன், முருகன், முனுசாமி, சண்முகம், சத்தியமூர்த்தி, தேவன், திம்மராயன், சின்னசாமி, முனுசாமி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.

செய்தியாளர் 

மாருதி மனோ