அங்கன்வாடி மையங்களில் அமீகா அறக்கட்டளை சார்பாக, இலவச மாண்டிசோரி முறை ஆங்கில வழிக் கல்வி .!

கிருஷ்ணகிரி

அங்கன்வாடி மையங்களில் அமீகா அறக்கட்டளை சார்பாக, இலவச மாண்டிசோரி முறை ஆங்கில வழிக் கல்வி .!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ஊராட்சி ஒன்றியம், சின்னஎலசகிரி மற்றும் நல்லூர் அங்கன்வாடி மையங்களில் அமீகா அறக்கட்டளை சார்பாக, இலவச மாண்டிசோரி முறை ஆங்கில வழிக் கல்வியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., துவக்கி வைத்தார்.

உடன் ஒசூர் சார் ஆட்சியர் திருமதி.ஆக்ரிதி சேத்தி, இ.ஆ.ப., அமீகா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்கள் திருமதி லட்சுமி ராமமூர்த்தி, திரு தர்மராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ