கம்பன் கழகத்தின் சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கம்பன் கழகத்தின் சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது அதில் துவக்கமாக தேன் தமிழ் நாட்டியாலா பள்ளி மாணவிகள் நடனமாடினார். அதைத் தொடர்ந்து டாக்டர்.குரு மதுமொழி ஆனந்த வரவேற்புரை ஆற்றினார்.
இவ்விழாவிற்கு கம்பன் கழக தலைவர் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் அவர்கள் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் கா.வே.சிங்காரவேல் , மதிப்புறு முனைவர் பாலாஜி மற்றும் துணைச் செயலாளர் சீனிவாசன், சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
விழாவுக்கு சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் ஏகம்பவாணன் அவர்கள் விநாயகர் சதுர்த்தி பற்றி விளக்க உரை அளித்தார். செயலாளர் பன்னீர் செல்வம் வாழ்த்துரை வழங்கினார். விழா ஏற்பாடுகளை பொருளாளர் மு ஸ்ரீரங்கன் செய்தார்.
விழா முடிவில் செயலாளர் மதிப்புறு முனைவர் க.அருள் அவர்கள் நன்றி உரை கூறினார்.
செய்தியாளர்
மாருதி மனோ