மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பாக, கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பாக, கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகளை பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.தினேஷ்குமார் இ.ஆ.ப.,அவர்கள் ஒட்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, உதவி ஆணையர் (ஆயம்) பழனி, அரசு போக்குவரத்து கிளை மேலாளர் ராஜேஷ், காவல் ஆய்வாளர் (மது விலக்கு) பிரகாஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
