காங்கிரஸ் கமிட்டியின் ஓ.பி.சி துறை சார்பில் மத்திய அரசின் ஓட்டுத் திருட்டுக்கு எதிராக கையழுத்து இயக்கம் .!
கிருஷ்ணகிரி

பையூர் ஊராட்சி, சப்பாணிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையோரம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் ஓ.பி.சி துறை சார்பில் மத்திய அரசின் ஓட்டுத் திருட்டுக்கு எதிராக கையழுத்து இயக்கம் துவங்கியது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் ஓ.பி.சி.துறை சார்பில் மோடியின் தலைமையிலான மத்திய அரசின் ஓட்டுத் திருட்டை கண்டித்து மாவட்டம் முழுவதும் ஊராட்சிகள் வாரியாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது,
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஓ.பி.சி துறையின் மாநிலத் தலைவர் நவீன் மற்றும் தமிழக மாநில தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோரின் உத்தரவின்படி கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவருமான எல். சுப்பிரமணியன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஓ.பி.சி. துறையின் மாவட்டத் தலைவர் கவியரசன் தலைமையில் இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
சப்பாணிப்பட்டி தேசியநெடுஞ்சாலையோரம் அருகில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தின் போது மோடியின் தலைமையிலான மத்திய அரசுக்கும், அதற்கு துணை போன தேர்தல் ஆணையத்தினையும் கண்டித்து வாக்கு வாக்கு திருட்டுக்கு எதிராக தங்களது கையெழுத்தினை பதிவு செய்தனர்.
அப்போது கிருஷ்ணகிரி தொகுதி தலைவர் சசிகுமார், மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரகுநாதன், துரைசாமி, புகழேந்தி, குமார்,வரதராஜன், கோவிந்தராஜ், கோவிந்தன், நரசிம்மன், முத்தமிழ், கவிதா, சுஷ்மா, ரத்தினம்மாள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ