முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ்குமார் இ.ஆ. ப.இன்று ஆய்வு செய்தார்.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பையனப்பள்ளி ஊராட்சி, சிப்பாயூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ்குமார் இ.ஆ. ப.அவர்கள் இன்று ஆய்வு செய்தார்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு தரமானதாகவும் சுகாதாரமாகவும் உள்ளதா என்பதை ஆய்வு செய்து காலை உணவு திட்டம் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் இருப்பு விவரம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து, காலை உணவு சாப்பிடும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் நாள்தோறும் வழங்கப்படும் முதலமைச்சரின் காலை உணவு குறித்து கலந்துரையாடினார்
இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிரகாசம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜு, வட்டார கல்வி அலுவலர் திருமதி. லோகநாயகி, ஊராட்சி செயலர் திருமதி. மல்லிகா ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ