அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் டாக்டர் அம்பேத்காரின் திரு உருவச்சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.!

கிருஷ்ணகிரி

அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் டாக்டர் அம்பேத்காரின் திரு உருவச்சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.!

கிருஷ்ணகிரியில் அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் டாக்டர் அம்பேத்காரின் திரு உருவச்சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரியில் அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பாக இந்திய அரசியல் அமைப்பினை உருவாக்கியவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்த உத்தமர் 
டாக்டர் அம்பேத்காரின் 69வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.


 
இதனைத் தொடர்ந்து அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் குப்புசாமி தலைமையில்
கிருஷ்ணகிரி  தாலுகா அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கரின் திருஉருவச் சிலைக்கு ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் குப்புசாமி மாலை அணிவித்து மரியாதை   செலுத்தினார்.

அப்போது டாக்டர் அம்பேத்கரின்  நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சிவகுமார், கிருஷ்ணகிரி ஒன்றிய செயலாளர் அருண் மாவட்ட துணைச் செயலாளர் சரவணன், ஆசிரியர்கள் ஜெயராஜ், ஜோதிமணி, வில்லியம், மணி, ஆபிரகாம், குட்டப்பள்ளி குமார் உள்ளிட்ட பலர் கொண்டு டாக்டர் அம்பேத்கருக்கு மாலை அணிவித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ