அங்கன்வாடி மையம் கல்வி நிதி 2024-2025 ஆம் ஆண்டு புதிய கட்டிடத்திற்கு நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அடிக்கல் நாட்டினார்.!

மேட்டுப்பாளையம்

அங்கன்வாடி மையம் கல்வி நிதி 2024-2025 ஆம் ஆண்டு புதிய கட்டிடத்திற்கு நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அடிக்கல் நாட்டினார்.!

மேட்டுப்பாளையம் நகராட்சி 6 வது வார்டு ஆனைக்கார தெருவில் அமைந்துள்ள SM நகர் 2 அங்கன்வாடி மையம் கல்வி நிதி 2024-2025 ஆம் ஆண்டு புதிய கட்டிடத்திற்கு நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா B.se.,ML..,MP அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார் .

இந்நிகழ்வில் மேட்டுப்பாளையம் நகராட்சி நகர மன்ற தலைவர் மெஹ்ரிபா பர்வீன் அஷ்ரப் அலி,
நகர மன்ற துணை தலைவர் அருள்வடிவு முனுசாமி, நகராட்சி ஆணையாளர் அமுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் 16 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் அனீஷா பாபு , நகராட்சி அதிகாரிகள் ME, JE, AE, மற்றும் திமுக மாநில விவசாய அணி (துணை) செயலாளர் பா.அருண்குமார் Ex MLA ,திமுக மாநில செயற்குழு உறுப்பினர் அஷ்ரப்அலி ,காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் SMT கல்யாண சுந்தரம்! வடக்கு திமுக நகர செயலாளர் முஹம்மது யூனூஸ், திமுக மேற்கு நகர செயலாளர் முனுசாமி, திமுக 6 வது வார்டு செயலாளர் வழக்கறிஞர் விடியல் விமல், திமுக மாவட்ட பிரதிநிதி பால்ராஜ், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மாவட்ட துணை செயலாளர் பக்கீர் முஹம்மது , MVS மாவட்ட செயலாளர் ஜுபைர் , மமக நகர செயலாளர் யாசர் அராபத் , அறிவொளி நகர் சல்தீன், மற்றும் அங்கன்வாடி ஆசிரியர் ஆசிரியர்கள் புனிதா , சரோஜா மற்றும் 6 வது வார்டு பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .  

இறுதியாக 6 வார்டு நகரமன்ற உறுப்பினர் ஸமீனா பேகம் அப்துல் ஹக்கீம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி நிகழ்ச்சி நிறைவு செய்தார்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )