கிருஷ்ணாபுரம் திருநாவுக்கரசு பள்ளியில் விபத்தில்லாத  தீபாவளி விழிப்புணர்வு  நிகழ்ச்சி.!

தென்காசி

கிருஷ்ணாபுரம் திருநாவுக்கரசு பள்ளியில் விபத்தில்லாத  தீபாவளி விழிப்புணர்வு  நிகழ்ச்சி.!

கிருஷ்ணாபுரம் திருநாவுக்கரசு பள்ளியில் விபத்தில்லாத  தீபாவளி விழிப்புணர்வு  நிகழ்ச்சி

தென்காசி, அக்.9

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சரகம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான திருநாவுக்கரசு தொடக்கப்பள்ளியில் விபத்தில்லாத பாதுகாப்பான  தீபாவளி கொண்டாடுவது பற்றி  கடையநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராஜ் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு மாணவர்கள் தீபாவளி பண்டிகையின் போது விழிப்புணர்வோடும் பாதுகாப்போடும், எவ்வாறு வெடி வெடிக்க வேண்டும் என்பது பற்றியும் வெடி விபத்து ஏற்பட்டால் எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாணவர்களிடையே உரையாற்றினார்.

மேலும் பள்ளி மாணவர்களைத் தேடி  தாமாக முன்வந்து மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களிடம் வெடி விபத்தில்லாத தீபாவளி கொண்டாடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வழிநடத்தும் மற்றும் தன்னலமற்ற நேர்மையான  அவரின் சேவையைப் பாராட்டி 2025 ம் ஆண்டிற்காக சிறந்த சமூக சேவைக்கான பாராட்டு மடலை பள்ளி  சார்பாக பள்ளி செயலர் செல்லம்மாள் பள்ளி கல்விகுழு  உறுப்பினர் ரெங்கநாயகி, முன்னாள் தலைமை ஆசிரியர் வெங்கடேஷ்வரன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சுப்பு லெட்சுமி மற்றும் ஆசிரியர்கள் இணைந்து இந்த பாராட்டு மடலை வழங்கி கெளரவித்து நன்றி தெரிவித்தனர்.

இதில் 100 மாணவர்கள்  மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நல்லாசிரியர் பழனிக்குமார் செய்திருந்தார்.

செய்தியாளர்

AGM கணேசன்