தென்காசி வட்டாரக் கல்வி அலுவலர் இளமுருகனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா.!

தென்காசி

தென்காசி வட்டாரக் கல்வி அலுவலர் இளமுருகனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா.!

தென்காசி வட்டாரக் கல்வி அலுவலர் இளமுருகனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

தென்காசி மே - 6

பணி நிறைவு பெற்ற தென்காசி வட்டாரக் கல்வி அலுவலர் இளமுருகனுக்கு  அவரின் 38 ஆண்டுகால அரசுப்பணியை  பாராட்டி ஆசிரியர் இயக்கங்கள் சார்பில் பாராட்டு விழா இசக்கி மஹாலில் வைத்து நடைபெற்றது.
இவ்விழாவிற்கு முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகேசன் தலைமை வகித்தார்.

உதவித்திட்ட அலுவலர் மீரான் , வேதம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன், மடத்தூர் இந்து நடு நிலைப் பள்ளி நிர்வாகி கதிர்வேல் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மன்ற மாநில பொருளாளர் அம்பை கணேசன் வரவேற்றார்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் மணிமாறன், ரபீக், தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைமை ஆசிரியர்கள் ராமர், மருது, ரசூல், மோதிலால் ஆகியோர் பணி நிறைவு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலரின் கல்விப் பணிகளை எடுத்துரைத் தனர். வாசுதேவநல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் மாரியப்பன், கருங்குளம் முத்துகுமார் நூலகர் சுந்தர் ஆகியோர் என் எம் எம் எஸ் தேர்வுக்கு இவர் ஆற்றிய பணிகள் குறித்து நினைவு கூர்ந்து பாராட்டினார்கள்.

தலைமை ஆசிரியர்கள் ராஜதுரை, கற்பகம், ஆறுமுகம் , சண்முக குமார், சங்கர், குத்தாலிங்கம் ஆகியோர் பள்ளி வளர்சிக்கும் மாணவர் மேம்பாட்டிற்கும் இவர் ஆற்றிய பணிகள் குறித்து நினைவு கூர்ந்தனர்.

இசக்கி பள்ளி நிர்வாக அலுவலர் ராம்குமார்,காசிமேஜர் புரம் சேகர் பாண்டியன், பணி நிறைவு மாவட்ட நூலக அலுவலர் முனியப்பன் , மாவட்ட தொடக்க கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் புகாரி , வட்டார வளமைய மேற்பார்வையாளர் சரஸ்வதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ் நாடு அறிவியல் இயக்கம் முனைவர் சித்ரா, சேக் ஒலி வாவா, வின்சென்ட் ஆகியோர்  சமூகப் பணிகளை எடுத்துக் கூறி பாராட்டினார்கள். தென்காசி மாவட்ட பல்வேறு பள்ளிகளின் நிர்வாகிகள் , தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என திரளாக வருகை தந்து வாழ்த்தினர்.பாராட்டு  பெற்ற இளமுருகன் ஏற்புரை வழங்கினார்

ஆசிரியர் சுரேஷ்குமார் தொகுத்து வழங்கினார்.  வாசுகி இளமுருகன் நன்றி கூறினார். இவ் விழாவுக்கான ஏற்பாடுகளை முகில் அரசன், எழில் நிலவன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்