ஸ்டார் ஹாக்கி பயிற்சி மையத்தினை துவக்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலர்.!
தென்காசி

தென்காசியில் ஸ்டார் ஹாக்கி பயிற்சி மையத்தினை மாவட்ட வருவாய் அலுவலர்ஜெயச்சந்திரன் துவக்கி வைத்தார்
தென்காசி மே 6
தமிழ்நாடு முதலமைச்சர் வழி காட்டுதலின்படி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் நேரு விளையாட்டரங்கில் ஸ்டார் அகாடமியை துவக்கி வைத்ததை தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் கிரீன் பார்க் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஸ்டார் ஹாக்கி பயிற்சி மையத்தினை தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் துவக்கி வைத்து அனைத்து வீரர் வீராங்கனைகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகளை வழங்கினார்.
அதன்பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தமிழ்நாட்டை விளையாட்டில் முதன்மையான மாநிலமாக உருவாக்குவதுடன் தனி நபர்களுக்கு விளையாட்டுக்களை முழு திறனுடன் அணுகவும் அவர்கள் உயர்மட்ட போட்டியில் பங்கு பெற்று சிறப்படையவும் வாய்ப்புகளை வழங்குகிறது.
பல்வேறு விளையாட்டுகளில் உயர்தர பயிற்சிக்கான வழிகளை உருவாக்கி வீரர்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் அவர்களின் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திடும் நோக்கத்தோடு விளையாட்டு வீரர்களின் பின்புலம் தனி திறன்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து வீரர் வீராங்கனைகளுக்கு சம வாய்ப்பினை வழங்கி அனைத்து விளையாட்டு வீரர்களும் பயனளிக்கும் ஒரு சீரான விளையாட்டு மேம்பாட்டு அணுகுமுறையை வழங்குவதை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நோக்கமாக கொண்டு செயல்படுகிறது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜேஷ் கிரீன் பார்க் பள்ளி தாளாளர் மாரியப்பன் கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் குரு சத்திர பாரதி மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுநர்கள் அலுவலக பணியாளர்கள் பொதுமக்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்