புளியங்குடியில் நகர காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா .!
தென்காசி

புளியங்குடியில் நகர காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா
தென்காசி அக் 04
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அண்ணல் காந்தியடிகளின் 157 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர தலைவர் பால்ராஜ் தலைமை வகித்து பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தியடிகளின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கலர்ஸ் ராஜா முகமது ஜாகிர் உசேன் மாவட்ட காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, நகர துணை தலைவர் ஈஸ்வர மூர்த்தி, பொதுச்செயலாளர் முகமது ஜவஹர்லால், செயற்குழு உறுப்பினர் பாக்கியராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்