த வெ க கட்சி நிர்வாகிகளை சாடி 10 கேள்விகளை கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி. !

கரூர்

த வெ க கட்சி நிர்வாகிகளை சாடி 10 கேள்விகளை கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி. !

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரை பெஞ்ச் நீதிபதி எம். ஜோதிராமன் விசாரித்து வருகிறார். 

https://newstodaytamil.com/Tamil-Nadu-2647

விஜய்க்கு வைக்கப்பட்ட குட்டு

1. கரூர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவருக்கு தலைமை பண்பே இல்லை. விஜய்க்கு தலைமை பண்பு இல்லை. விஜய் தொண்டர்கள் ரசிகர்கள் மக்களை கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறியுள்ளார்

2. அதேபோல் விஜய் பிரச்சார ஏற்பாட்டாளர்கள் மீது கருணை காட்டாதீர்கள். வழக்கு பதிவு செய்க,. நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழக அரசு ஆதவ் அர்ஜூனா டெலிட் செய்யப்பட்ட போஸ்டை காட்டிய நிலையில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

3. ஆதவ் அர்ஜுனா போட்ட பதிவு குறித்து விசாரிக்க வேண்டும். அதன் பின்புலத்தை விசாரிக்க வேண்டும். எதன் அடிப்படையில் போஸ்ட் செய்யப்பட்டது. இவர்கள் எல்லாம் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், எனவே இந்த சம்பவத்தில் அரசு அமைதியாக இருக்கக்கூடாது

5. சட்ட பூர்வமாக அவர் மீது ஆக்சன் எடுங்கள். ஏன் கருணை காட்டுகிறீர்கள். அவர் மீது ஆக்சன் எடுங்கள். ஒரு சின்ன வார்த்தை பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி விடும். நீதிமன்றம் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது. தேவையான நேரங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுங்கள்.

6. நடிகர் விஜய் பயணித்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகின. இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதா? நீதிமன்றம் கண் மூடி வேடிக்கை பார்க்க முடியாது.

7. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்ற உத்தரவிற்காக காத்து இருக்காதீர்கள். நீங்களே நடவடிக்கை எடுங்கள். அவர் புரட்சி ஏற்படுத்தும் விதமாக போஸ்ட் செய்துள்ளார். எப்படி பார்த்துக்கொண்டு இருந்தீர்கள். பொறுப்பற்ற இது போன்ற பேச்சுக்களை உடனே களைய வேண்டும்,.

8. வீடியோக்களை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா, hit and run வழக்குப் பதிவு செய்யப்பட்டதா? இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை. வழக்குப் பதிவு செய்ய என்ன தடை, புகார் இல்லாவிட்டாலும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

9. ஓட்டுநர் வெளியே எட்டிப் பார்த்தும், பேருந்தை நிறுத்தவே இல்லை.. அதிர்ச்சியாக இருக்கிறது.. வீடியோக்களை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா?

10. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய் மீது அரசு கரிசனம் காட்டுகிறதா? இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்று கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.