6 வழக்கறிஞர்கள் தவெக தரப்பில் சுமார் 30 நிமிட வாதம், ஒரே பாயின்ட்டில் வாயடைக்க வைத்த அரசு வழக்கறிஞர். !

கரூர்

6 வழக்கறிஞர்கள் தவெக தரப்பில் சுமார் 30 நிமிட வாதம்,  ஒரே பாயின்ட்டில் வாயடைக்க வைத்த அரசு வழக்கறிஞர். !

கரூரில் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், இதில் முன்ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தவெக சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பல்வேறு வாதங்களை முன்வைத்தனர். அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு, ஒரே ஒரு கேள்வியைக் கேட்டது. அதற்குப் பதில் சொல்ல முடியாமல் தவெக தரப்பு திணறிவிட்டது.

கரூரில் கடந்த வாரம் விஜய் பிரச்சாரம் செய்தார். அப்போது இரவு லேட்டாக வந்த விஜய், மக்களிடையே பேச ஆரம்பித்தார். ஆனால், அப்போது திடீரெனக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விஜய் அங்கு வந்தவுடன் பலரும் அவரை பார்க்க ஆர்வமாக வந்தனர். இதனால் எதிர்பாராத விதமாகக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பலருக்கு மூச்சுத் திணறல் மயக்கம் ஏற்பட்ட நிலையில், 41 பேர் உயிரிழந்தனர்.

வழக்கு விசாரணை

இந்தச் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கைது செய்யப்படலாம் எனச் சொல்லப்பட்ட நிலையில், இருவருமே முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இன்று பிற்பகலில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பல்வேறு வாதங்களை வரிசையாக முன்வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றமற்ற கொலை பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சொந்தக் கட்சியினரைக் கொல்லும் எண்ணம் இல்லை என்பதால் இந்த விபத்தைக் குற்றமற்ற கொலை என்று கூற முடியாது என்று வாதத்தை முன்வைத்தனர்.

அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

தமிழக அரசு மீதும் போலீசார் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக வைத்தனர். காவல்துறை போதுமான பாதுகாப்பை வழங்கத் தவறியதுதான் சிக்கலுக்குக் காரணம் என்று தெரிவித்தனர். மேலும், தாங்கள் சொன்ன இடத்தில் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை என்ற தவெக தரப்பு, போலீசாரே இந்த இடத்தை வழங்கியதாகவும் இதில் தீய நோக்கம் இருப்பதாக நினைக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.

இதன் பிறகு சில தீவிரமான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர். அதாவது கூட்டம் அதிகமான போது கூட்டத்திற்குள் சில குண்டர்கள் நுழைந்தனர் என்றும் அவர்கள் கைகளில் ஆயுதங்களை வைத்து இருந்ததாக மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர் என்றும் தெரிவித்தனர். திட்டமிட்டு அசம்பாவிதம் செய்தது போலவே இருப்பதாகவும் தவெக தரப்பினர் தெரிவித்தனர்.

குண்டர்கள் & கெமிக்கல்

அந்த குண்டர்கள் அப்பாவி மக்களை ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதாகவும் சில குண்டர்கள் விஜய் மீது செருப்பை வீசி எறிந்ததாகவும் புஸ்ஸி- நிர்மல் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மேலும் வேலுசாமிபுரம் ஆட்சேபணைக்குரியதாக இருந்தால், கோரிக்கையை ஏற்று இருக்கவே கூடாது என்றும் வாதத்தை முன்வைத்தனர். கூட்டத்தில் திடீரென தடியடி நடத்தப்பட்டதாகத் தெரிவித்த வழக்கறிஞர்கள், இதுவே கூட்டத்தை ஆத்திரப்படுத்தியதாகவும் தடியடி ஏன் நடத்தப்பட்டது என சந்தேகம் தருகிறது என்றும் தெரிவித்தனர். மேலும், கூட்டத்தில் கெமிக்கல் வீசப்பட்டதாக எல்லாம் வாதம் முன்வைத்தனர்.

ஒரே பாயிண்ட்

தவெக சார்பில் மொத்தம் 6 வழக்கறிஞர்கள் ஆஜராகி இருந்தனர். போலீசார் மற்றும் தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமார் 20- 30 நிமிடங்கள் இதுபோல தொடர்ச்சியாக முன்வைத்தனர். அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு வழக்கறிஞர், "இவ்வளவு சொல்கிறீர்களே.. இதற்கு ஒரு ஆதாரத்தையாவது காட்டுங்கள்" என்று கேட்டுள்ளார். இதைக் கேட்டவுடன் தவெக தரப்பு மேற்கொண்டு எந்தவொரு வாதத்தையும் சொல்லவில்லை.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "இதை நான் வெறுமன ஜாமீன் வழக்காக மட்டும் பார்க்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் இருந்து பார்க்கப் போகிறேன்" என்று தெரிவித்தார்.