தமிழ்நாடு தலித் விடுதலை இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.!
தென்காசி

தமிழ்நாடு தலித் விடுதலை இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
தென்காசி அக் 14
தமிழ்நாடு தலித் விடுதலை இயக்கம் சார்பில் அதன் மாநில தலைவர் கருப்பையா தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ கே கமல் கிஷோரை சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கினர்.
அந்த மனுவில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது,
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம் பனையூர் வயலி மிட்டா கிராமத்தில் ஆதி திராவிட நலத்துறையின் சார்பில் வீடு இல்லாத மக்கள் 30 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளனர்.
இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய இரண்டு ஏக்கர் இடத்தை சுற்றிலும் தனிநபர் சிறு பத்திரகாளி அம்மன் சிலையை வைத்து மாந்திரீக வைத்தியம் செய்வதாக பொது மக்களை ஏமாற்றி கூட்டம் சேர்த்து இலவச வீட்டு மனை பட்டாவுக்கு வழங்கிய நிலம் முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்து விட்டார்.
மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனுவினை கொடுத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவினை மாநில தலைவர் கருப்பையா தலைமையில் மக்கள் உரிமை இயக்க தலைவர் அண்ணாதுரை, பழந்தமிழர் புலிப்படை தலைவர் மின்னல் வரதன், தென்காசி மாவட்ட தலைவர் மகேஷ் பாண்டியன், ஜெயபால் துரை, மாவட்ட செய்தியாளர் சமுத்திரம், திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் முத்து, மற்றும் வயலி மிட்டா கிராம பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்