சுரண்டை அருகே பைக் மீது மினி லாரி மோதி .!

தென்காசி

சுரண்டை அருகே பைக் மீது மினி லாரி மோதி .!

சுரண்டை அருகே பைக் மீது மினி லாரி மோதி 

காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் அவரது கணவன்  உட்பட 3 பேர் பலி


தென்காசி, நவ - 30

தென்காசி மாவட்டம் சுரண்டையில்  அருகே இருசக்கர வாகனம் மீது காய்கறி ஏற்றிவந்த மினி லாரியும் மோதியதில் சுரண்டை நகராட்சியின் ஏழாவது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் மற்றும் அவரது கணவர்  உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இது பற்றி சுரண்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தென்காசி மாவட்டம் சுரண்டை சங்கரன்கோவில் செல்லும் சாலையில் இரட்டை குளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுரண்டை நகராட்சி 7வது வார்டு காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் உஷா பேபி (வயது 40) மற்றும் அவரது கணவர் அருள்செல்வம் (வயது 50), அவருடைய தங்கை பிளஸ்ஸி (வயது 35)ஆகிய மூன்று பேரும் வயலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த காய்கறி லாரி பைக் மீது மோதி விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். விபத்தில் சிக்கி உயிரிழந்த நகர்மன்ற உறுப்பினர் உஷா பேபிக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு ஆண்கள் உள்ளனர்.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த சுரண்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த மூவரின் உடல்களையும்  மீட்டு பிரேத பரிசோதனைக்காக   அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுரண்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக தென்காசி அருகே இடைகால் பகுதியில் இது போன்ற சாலை விபத்தில் ஏழு பேர் உயிரிழந்த  நிலையில் இன்று  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் தென்காசி மாவட்டத்தில் விபத்துகள் அதிகரித்து வருவது வாடிக்கையாக உள்ளது.இதை கட்டுப்படுத்த மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர் .

செய்தியாளர்

AGM கணேசன்