ஜெகதேவி , துரை மாடர்ன் பள்ளி (சிபிஎஸ்இ)யில் உலக மாணவர் தினம் கொண்டாடப்பட்டது. !

கிருஷ்ணகிரி

ஜெகதேவி , துரை மாடர்ன் பள்ளி (சிபிஎஸ்இ)யில் உலக மாணவர் தினம் கொண்டாடப்பட்டது. !

ஜெகதேவி , துரை மாடர்ன் பள்ளி (சிபிஎஸ்இ)யில் உலக மாணவர் தினம் கொண்டாடப்பட்டது. 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி தண்ணீர் பள்ளம் கிராமம், துரை  மார்டன் பள்ளி (சிபிஎஸ்இ) யில் ஏ பி ஜே அப்துல் கலாம் பிறந்தநாள் மற்றும் உலக மாணவர் தினம் கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி நிர்வாகி சிந்து அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

தலைமை விருந்தினராக பள்ளி நிறுவனர்  மணி அவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினராக தாளாளர் சத்தியமூர்த்தி  மாணவர்களுக்கு டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் ஐயா அவர்களைப் பற்றி விளக்கி கூறினார்கள். 

உலக மாணவர் தினத்தை முன்னிட்டு கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை அனைத்து ஆசிரியர்களும் செய்தனர்.
விழா முடிவில் பள்ளி முதல்வர் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் நன்றி உரை கூறினார்.

செய்தியாளர் 

மாருதி மனோ