அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத அருள்முருகன் திருக்கோவிலுக்கு நிதி உதவி .!
கிருஷ்ணகிரி
கொல்லப்பள்ளி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத அருள்முருகன் திருக்கோவிலுக்கு நிதி உதவி வழங்கிய காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியத்திற்கு விழாக் குழுவினர் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம், பீமண்டபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லப்பள்ளி கிராமத்தில் புதியதாக எழுந்தருளியுள்ள அருள்மிகு
ஸ்ரீ வள்ளி தெய்வானை அருள்முருகன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்று முடிந்தது,

இந்த மஹா கும்பாபிஷேக விழாவிற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.
அப்போது இந்த திருக்கோவிலுக்கு திருக்கோவிலை சுற்றி சுற்று சுவர் அமைப்பதற்காக தன்னால் முடிந்த நிதி உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதனை அடுத்து திருக்கோவில் நிர்வாகிகள் நன்றி தெரிவித்து எல்.சுப்பிரமணியன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
அப்போது முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், ஊர் கவுண்டருமான செல்வராஜ் உள்ளிட்ட கொல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்களும் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
