கரூர் வட்டச் செயலாளர் உட்பட 25 பேர் த வெ க விலிருந்து விலகி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுக வில் இணைந்தனர். !

கரூர்

கரூர் வட்டச் செயலாளர் உட்பட 25 பேர் த வெ க விலிருந்து விலகி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுக வில் இணைந்தனர். !

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) கரூர் மேற்குப் பகுதி 44-வது வார்டைச் சேர்ந்த வட்டக் கழகச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், வார்டு துணைச் செயலாளர் வீராசாமி உட்பட 25 பேர் நேற்று (அக்.26) திடீரெனக் கட்சியில் இருந்து விலகி, திராவிட முன்னேற்றக் கழகத்தில் (தி.மு.க.) இணைந்தது த.வெ.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் அனைவரும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தங்களை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர்.

கரூர் மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகளில் சிலர் விலகிய இந்தச் சூழ்நிலையில்,

கரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை த.வெ.க. தலைவர் விஜய் இன்று (அக். 27) மாமல்லபுரத்தில் சந்தித்து ஆறுதல் கூறவிருக்கும் நிலையில் இந்த விலகல் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது, தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்ட செயல்பாடுகளில் சலசலப்பையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.