தென்காசி யூனியன் கூட்டம் நடைபெற்றது. !
தென்காசி

தென்காசி யூனியன் கூட்டம்
தென்காசி யூனியன் கூட்டம் தலைவர் ஷேக் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது.
ஆணையர் மாணிக்கவாசகம், துணைத் தலைவர் கனகராஜ், முத்துப் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் அழகு சுந்தரம், செல்வநாயகம், மல்லிகா, வினோதி, சுப்புலட்சுமி, ஆனந்தராஜ், கலாநிதி, ப்ரியா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் செங்கோட்டை- குற்றாலம் மெயின் ரோடு மேற்கு பக்கத்திலிருந்து சின்னத்தம்பி கோவில் தெரு முதல் அலங்கார் நகர் வரை சிமெண்ட் வாறு கால் அமைத்தல் பண்பொழி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் அமைந்துள்ள நுழைவாயிலில் கதவு அமைத்தல் குத்துக்கல்வலசை கிராம ஊராட்சி தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறை கட்டிடம் இடித்தல் மேலும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களின் இருப்பு அறை இடித்தல் உள்ளிட்ட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்தியாளர்
AGM கணேசன்