தென்காசிடாக்டர் மு.ரா எழுதிய புத்தக வெளியீட்டுவிழா .!
தென்காசி

தென்காசிடாக்டர் மு.ரா எழுதிய புத்தக வெளியீட்டுவிழா
தென்காசியில் பிரபல எலும்பு மூட்டு மருத்துவர் டி.ஆர்.எஸ்.முத்துராமன் (மு.ரா) எழுதிய புத்தக வெளியீட்டு விழா வரும் 24.10.2025 அன்று நடைபெற உள்ளது.
தென்காசி பிரபல எலும்பு மூட்டு மருத்துவர் டி.ஆர்.எஸ். முத்துராமன் (மு.ரா)எழுதிய கொசுக்கடி என்ற குறுங்கவிதை தொகுப்பு புத்தக வெளியீட்டு விழா வரும் 24.10. 2025 வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணிக்கு தென்காசியிலிருந்து ஆய்க்குடி செல்லும் பாதையில் உள்ள டி.ஆர்.சண்முகசுந்தரம், எஸ்.செல்வ முருகேசன் பல்கலை வளாக அரங்கில் வைத்து நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மூத்த வழக்கறிஞர் ஆர். ஜெகதீசன் தலைமை தாங்குகிறார். பாரத் கல்வி குழுமத்தின் தலைவர் காந்திமதி மோகன கிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். பட்டுக்கோட்டை ஸ்ரீ நாடி மருத்துவமனை மருத்துவர் சி.ஜே. இரவி, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் மருத்துவர் தே.பலராமகிருஷ்ணன் ஆகியோர் தென்காசி பிரபல எலும்பு மூட்டு மருத்துவர் டி.ஆர்.எஸ். மு.ரா எழுதிய கொசுக்கடி என்ற குறுங்கவிதை தொகுப்பு புத்தகத்தை வெளியீட்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
அதனைத் தொடர்ந்து நூலாசிரியர் டாக்டர் மு.ரா என்கிற டி.ஆர்.எஸ். முத்துராமன் ஏற்புரை நிகழ்த்துகிறார். இந் நிகழ்ச்சியில் தென்காசி, திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வருகை தருமாறு டாக்டர் டி ஆர் எஸ் முத்துராமன் (மு.ரா) கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தியாளர்
AGM கணேசன்