தென்காசி ரயில் நிலையத்தில் மும்பையில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங்கில் சாதனை படைத்த மாணவர்களுக்கு வரவேற்பு.!

தென்காசி

தென்காசி ரயில் நிலையத்தில் மும்பையில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங்கில் சாதனை படைத்த மாணவர்களுக்கு வரவேற்பு.!

தென்காசி ரயில் நிலையத்தில் மும்பையில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங்கில் சாதனை படைத்த மாணவர்களுக்கு வரவேற்பு 

தென்காசி நவ 28

உலக சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங் போட்டியில் சாதனை படைத்து தென்காசி வருகை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உலக சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற நிலையில் தமிழகத்தில் இருந்து மொத்தம் 21 பேர் பங்கேற்றனர்.

அதில் தென்காசி மாவட்டத்திலிருந்து 8 பள்ளி  மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிலையில் எட்டு மாணவ மாணவிகளும் பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தனர். தென்காசி மாவட்டத்திலிருந்து உலகளாவிய ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்ற தென்காசி இசக்கி
வித்தியாஷ்ரம் பள்ளி மாணவி வர்ஷா மூன்று தங்க பதக்கங்களும், சங்கரன்கோவில் வடக்கு புதூர் வேல்ஸ் பப்ளிக் பள்ளி மாணவர் ஸ்ரீதரன் ஒரு வெள்ளி பதக்கமும் ஒரு வெண்கல பதக்கமும் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்ட் பள்ளி மாணவி ரக்சன் சோனியா ஒரு வெள்ளிப் பதக்கமும் இரண்டு வெண்கல பதக்கமும், கணக்கப்பிள்ளை வலசை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர் விஜய் பிரதியூஸ் தென்காசி 
ஏ எஸ் ஏ வித்யா நிகேதன் பள்ளி மாணவர் பிரணவ், மேலகரம் மகரிஷி பள்ளி மாணவர் இஸ்வின் ராஜ், சங்கரன்கோவில் கோமதி அம்பாள் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவன் மாதவ், குற்றாலம் பராசக்தி வித்யாலயா  பள்ளி மாணவர் பவின் குமார் ஆகியோர் வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளனர்.

இந்த போட்டியில் தென்காசி மாவட்டத்திலிருந்து பங்கேற்ற எட்டு மாணவ மாணவிகளும் பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவ மாணவிகள் தென்காசி திரும்பினர்.

தென்காசி ரயில் நிலையத்தில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ரயில் நிலையத்தில் வைத்து கேக் வெட்டி வெற்றி கொண்டாட்டத்தை உற்சாகமாக கொண்டாடினர்.

மாணவர் மாணவிகள் சாதனை படைக்க காரணமான ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பாக்கியராஜை மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்