தாங்கள் விரும்பிய 2 தொகுதிகள் கிடைக்காததால் சோகத்தில் திரும்பிய பிரேமலதா விஜய்காந்த். !

தேமுதிக

தாங்கள் விரும்பிய 2 தொகுதிகள் கிடைக்காததால் சோகத்தில் திரும்பிய பிரேமலதா விஜய்காந்த். !

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் வழங்கப்பட்டிருக்கிறது.

2021 சட்டசபை தேர்தலில் 0.43 சதவீத வாக்கு வாங்கிய தேமுதிகவுக்கு 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியது கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது..

முக ஸ்டாலின் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது இப்போது வரை யாருக்கும் தெரியவில்லை. தற்போது கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்கிற பங்கீடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று காலை அறிவாலயத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வந்தார்.

அப்போது தேமுதிக விற்கு ஒதுக்கப்பட வேண்டிய 10 தொகுதிகள் தொடர்பான பட்டியலை பிரேமலதா விஜய்காந்த் டி.ஆர் பாலுவிடம் கொடுத்தார். அப்போது அந்த பட்டியலில் உள்ள விருகம்பாக்கம். ரிஷிவந்தியம் ஆகிய இரண்டு தொகுதிகளையும் திமுக கொடுக்க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது..

பிரேமலதாவின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நிலையில், பிரேமலதா ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டார். மேலும், விருகம்பாக்கம் தொகுதியை பார்த்தசாரதிக்கு கேட்டு பெறவும் அவர் திட்டமிட்டிருந்தார்.

ஏனெனில் 2011 சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சென்று பார்த்தசாரதி வெற்றி பெற்றார். ஆனால் அந்த இரண்டு தொகுதிகளையும் தொடக்க திமுக மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, பிரேமலதா சோகமாக திரும்பி சென்றதாக சொல்லப்படுகிறது.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )