நடிகை கஸ்தூரி டெல்லியில் தஞ்சமா? யார் வீட்டில் தங்கியுள்ளார்? விரைந்த தமிழக தனிப்படை
நடிகை கஸ்தூரி டெல்லியில் ஒரு தேசிய கட்சியின் பிரமுகரின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளதாக கிடைத்த தகவலை வைத்து தனிப்படை போலீஸார் டெல்லி விரைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டதை அடுத்து அவரை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது.
நடிகை கஸ்தூரி எந்த கட்சி பிரமுகரின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை இந்த தகவல் உண்மையாக இருந்தால் நிச்சயம் கஸ்தூரி, இன்றோ அல்லது ஓரிரு நாட்களிலோ கைது செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.
இதனிடையே ஆந்திராவில் கஸ்தூரி இருப்பதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதிலும் ஒரு சினிமா தயாரிப்பாளர் வீட்டில் அவர் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாம். இதனால் அங்கும் ஒரு தனிப்படை போலீஸார் விரைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கஸ்தூரிக்கு ஹைதராபாத்தில் ஒரு வீடு இருப்பதாக சொல்லப்படுகிறது. அது போல் அவர் ஆந்திரா அரசியலில் குதிக்க போவதாக அவரே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவர் அங்கு சென்றிருக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்களை இழிவாக பேசியதால் அவருக்கு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் தஞ்சம் கொடுத்திருப்பார்களா என்பதும் சந்தேகமாகவே இருக்கிறது. எதுவாக இருந்தாலும் கஸ்தூரி கைது செய்யப்படும் போதுதான் அவர் எங்கு தங்கியிருந்தார் என்பது தெரியவரும் கருதுகின்றனர்.