பா.ஜ.க வேட்பாளர் பட்டியலில் இடம் பெறுவாறா தமிழிசை? மைலாப்பூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பு. !

அதிமுக + பா.ஜ.க

பா.ஜ.க வேட்பாளர் பட்டியலில் இடம் பெறுவாறா தமிழிசை?  மைலாப்பூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பு. !

மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. இன்னும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாத நிலையில், நேற்று அந்தத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார்.

இதனால், மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசைதான் வேட்பாளராகப் போட்டியிடுகிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பலமாக எழுந்தது. இந்தக் கேள்விக்கு விளக்கமளித்த தமிழிசை சவுந்தரராஜன், எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்ததன் காரணமாகவே தான் இந்தப் பிரசாரத்தில் பங்கேற்றதாகக் கூறினார்.

மேலும், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடப்போகும் வேட்பாளர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ பட்டியலை பாஜக தலைமை விரைவில் வெளியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.