உள்துறை அமைச்சர் அமித்ஷா அலுவலகத்திலிருந்து போன்.! உடனே ஓடோடி வந்த பா.ஜ.க.புள்ளி.!
அரசியல்

சென்னை: டெல்லியில் உள்ள அமித்ஷாவின் அலுவலகத்தில் இருந்து "சென்னைக்கு உடனே வாருங்கள்" என்று முக்கியமான தலைவர் ஒருவருக்கு மெசேஜ் சென்றுள்ளதாம்.
இதனால் அந்த தலைவர் அவசர அவசரமாக கோவைக்கு சென்று அமித் ஷாவை சந்தித்துள்ளார்.
2 நாள் பயணமாக மத்திய அமைச்சரும், மூத்த பாஜக தலைவருமான அமித் ஷா நேற்றிரவு சென்னை வந்தார். இன்று அவர் பல சந்திப்புகளை ஆலோசனைகளை, கூட்டங்களை நடத்த உள்ளார். முக்கியமாக. பாஜக புதிய மாநிலத் தலைவர் நியமனம் தொடர்பாக ஆலோசனை செய்யப்படுகிறது. அதிமுக கூட்டணி மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கும் விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை இன்று(ஏப். 11) சந்திக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அமித் ஷாவை சந்திப்பது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி - அமித் ஷா இடையே நடந்த மீட்டிங்கில், தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி மட்டுமே திமுக கூட்டணியை வீழ்த்தும். வேறு கூட்டணிக்கு அரித்மேட்டிக் வாய்ப்புகள் கிடையாது. வேறு கூட்டணியால் எதுவும் செய்ய முடியாது. தமிழ்நாட்டில் கடந்த லோக்சபா தேர்தலில் திமுகவின் வெற்றி சதவிகிதம் பல தொகுதிகளில் குறைவுதான். பாஜக வாக்கு சதவிகிதம்தான் பல இடங்களில் திமுக வெற்றிக்கு காரணம். அதிமுக - பாஜக சேர்ந்து இருந்தால் திமுகவை பல தொகுதிகளில் வெல்ல விடாமல் தடுத்து இருக்கலாம்.
போனது போகட்டும்.. 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராக வேண்டும். நமக்கு இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. சில பதவிகள், சில தலைவர்கள் தொடர்பாக நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அதெல்லாம் நமது கூட்டணியில் எதிராக வரக்கூடாது. நம்முடைய இலக்கு.. சபதம் ஒன்றாகவே இருக்க வேண்டும். அது வெல்வது. நமது கூட்டணியின் நோக்கம் ஒன்றாகவே இருக்க வேண்டும். அது 2026ல் திமுகவை வீழ்த்துவது. அதுதான் நமது நோக்கம் மற்றும் கூட்டணியின் அடிப்படையாக இருக்க வேண்டும். என்ன விலை கொடுத்தாவது திமுக ஆட்சியை 2026 சட்டமன்ற தேர்தலில் அகற்றுவதுதான் நமது குறிக்கோள் என்று அமித் ஷா எடப்பாடியிடம் கூறி உள்ளார்.
இன்று கூட்டணி உறுதி
இந்த நிலையில் இன்று கோவையில் அமித் ஷா, 2026-ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டணி கணக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மாநிலத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமித் ஷா - நிர்வாகிகள் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. முக்கியமாக சென்னை கிண்டியில் காலை 11 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சந்திப்பிற்கு பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தலைவர் மாற்றம்
இன்று அவர் பல சந்திப்புகளை ஆலோசனைகளை, கூட்டங்களை நடத்த உள்ளார். முக்கியமாக. பாஜக புதிய மாநிலத் தலைவர் நியமனம் தொடர்பாக ஆலோசனை செய்யப்படுகிறது. ராசிபுரத்தில் இருந்த கே.பி.ராமலிங்கத்தை, டெல்லியில் உள்ள அமித் ஷாவின் அலுவலகத்தில் இருந்து, " சென்னைக்கு உடனே வாருங்கள்" என்று சொல்லப்பட்டுள்ளது. அதன்பேரில் அவசரம் அவசரமாக நேற்று மாலை 4:30 மணிக்கு காரில் புறப்பட்டு இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் கே.பி.ராமலிங்கம்.
அமித் ஷாவை வரவேற்கும் நிகழ்விலும் இணைந்து கொண்டார். அவரது வருகை பாஜக வி.ஐ.பி.க்களுக்கு ஆச்சரியத்தைத் தந்துள்ளது. காரணம், அமித் ஷாவை வரவேற்பவர்கள் பட்டியலில் அவரது பெயர், ஆரம்பத்தில் இல்லை. இன்று அமித் ஷாவை சந்திக்கும் பாஜக தலைவர்கள் பட்டியலில் தான் ராமலிங்கத்தின் பெயர் இருந்துள்ளது. அதனால் ஏர்போர்ட்டுக்கு அவர் வந்ததில் பலருக்கும் ஆச்சரியம் என்கிறார்கள் கமலாலயத்தார்.