த வெ க தலைவர் விஜயை வறுத்தெடுக்கும் நெட்டிஷன்கள்.!
அரசியல்

ஒரு நடிகர் பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டாலே அவர்களின் சொந்த வாழ்க்கையை நோண்ட துவங்கவிடுவார்கள்.இது எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே இருக்கிறது.
இது போல தான் தற்போது த வெ க தலைவர் விஜயும் நெட்டிஷன்களிடம் சிக்கியுள்ளார்.
சமீபத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்து மக்கள் பாதிக்கப்பட்டனர்.
மழையில் நிலச்சரிவு ஏற்பட்டு குழந்தைகள் உட்பட 7 பேர் இறந்து போனார்கள். இதற்கு பல கட்சிகளை சேர்ந்தவர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
ஆனால் விஜய் அங்கு போகவில்லை. ஆனால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலரை சென்னையில் உள்ள தனது பனையூர் அலுவகத்திற்கு நேரில் வரவழைத்து அவர்களுக்கு நிவாரண பொருட்களை கொடுத்தார் விஜய்.
இதை பலரும் கண்டித்தனர். ஒரு துயரமான நேரத்தில் மக்களை நேரில் சென்று சந்திக்காத விஜய் அரசியலுக்கு வந்து என்ன செய்யப்போகிறார்? என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களை தனது அலுவலகத்திற்கு எப்படி வரவழைத்து உதவி செய்து அதை செய்தியாக்கலாம். ஏற்கனவே பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் உள்ளவர்களை நேரில் வர சொல்லி உதவி எனும் பெயரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி அலைச்சல் ஏற்படுத்தலாம் எனவும் வசைபாடி வருகிறார்கள்.
இந்நிலையில்தான், நேற்று கோவாவில் நடந்த நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு விஜய் சென்றிருக்கிறார்.
நடிகை திரிஷாவுடன் தனி விமானத்தில் அங்கு போய் மணமக்களை வாழ்த்திவிட்டு வந்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து 'விழுப்புரத்துக்கு போக முடியல.. கோவாவுக்கு மட்டும் போவியா?' என சமூக வலை தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிஷன்கள்.