மேற்கு மாம்பலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து தொடர் பால் திருட்டில் ஈடுபடும் ஜோடிகள்.
சென்னை
மேற்கு மாம்பலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து தொடர் பால் திருட்டில் ஈடுபடும் ஜோடிகள்.
சென்னை மேற்கு மாம்பலம், மேட்டுபாளையம் மார்க்கெட் பகுதியில் சரவணன் எனபவர் கடந்த 20 ஆண்டுகளாக சரவணா பால் நிலையம் வைத்து நடத்தி வருகிறார். கடந்த ஒரு மாத காலமாக நான்கு முறை விடியற்காலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வரும் இரண்டு பெண்கள் ஒரு ஆண் என ஜோடியாக வந்து கடைக்கு வெளியில் வைத்திருக்கும் பால் டிரேவில் இருந்து பால் பாக்கெட்டுகளை பைகளில் எடுத்து போட்டுக் கொண்டு திருடிச் செல்கின்றனர். இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
நேற்று 22 பால்பாக்கெட்டுகளை திருடிச் சென்றுள்ளனர். அதே போல் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு முறை என சுமார் 60க்கும் மேற்பட்ட பால் பாக்கெட்டுகள் திருடு போயுள்ளது.
காவல்துறை உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு, பால் பாக்கெட்டுகளை திருடிச் செல்லும் பெண்கள் மற்றும் ஆண்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பால் நிலைய உரிமையாளர் கோரிக்கை வைக்கின்றார்.
செய்தியாளர்
S S K
