கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராமசந்திரன், எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் கனவான கிராமங்கள் தோறும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதே எனது கடமை என்று குறிப்பிட்டார்.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராமசந்திரன், எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் கனவான கிராமங்கள் தோறும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதே எனது கடமை என்று குறிப்பிட்டார்.!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராமசந்திரன், எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் கனவான கிராமங்கள் தோறும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதே எனது கடமை என்று குறிப்பிட்டார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில தலைவர் பவுண்குமார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பரிந்துரையின்படி கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தை சேர்ந்த ராமசந்திரன் என்ற ரமேஷ் குமாரை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட விவசாய பிரிவு மவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராமசந்திரன் என்ற ரமேஷ்குமார் கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி.ரகு, காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன், மாநில பொதுச் செயலாளர்களான முரளிதரன், கிருஷ்ணமூர்த்தி, ஏகம்பவாணன், முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முத்துகுமார், திருப்பத்தூர் மாவட்ட முன்னாள் மாவட்டத்தலைவர் பிரபு, ஜேசு துரை, நாராயணமூர்த்தி, கலைப் பிரிவு மாவட்டத் தலைவர் கோவிந்தசாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பொன்னாடை போர்த்தி தனது வாழ்த்தினையும் நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் இது குறித்து பேசிய விவசாய பிரிவு மாவட்டத் தலைவர் ராமசந்திரன் என்ற ரமேஷ் குமார் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகள் மூலம் கட்சிப்பணிகளை மேற்கொண்டுள்ளேன்.

தற்போது தனக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு தலைவர் ஸ்ரீ சுக்பால் சிங், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அன்னை சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விவசாய பிரிவு மாநில தலைவர் பவண் குமார் மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், கிழக்கு மாவட்டத் தலைவர் எம்.சி. இரகு, மாநில பொதுக்குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, வட்டார, நகர பொறுப்பாளர்கள் அனைவருக்கும் தனது நன்றினைத் தெரிவித்தார்.

மேலும் எனக்கு கொடுத்துள்ள இந்த பணியின் மூலமாக மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எதிர் கட்சி தலைவரான ராகுல் காந்தியின் கனவை நினைவாக்கும் விதமாக கட்சிக்கு அதிகப்படியான உறுப்பினர்களை சேர்த்து காங்கிரஸ் ஆட்சியின் போது செயல்படுத்தப்பட்ட திட்டங்களை எடுத்துகூறி கிராமங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதே எனது கடமை என்று குறிப்பிட்டார்.

அப்போது முன்னாள் நகர தலைவர் வின்சென்ட், மாவட்ட பொதுச்செயலாளர் கோவிந்தன், கெளரவத் தலைவர்
கருணாமூர்த்தி, வட்டார தலைவர் கல்லாவி ரவி, காவேரிப்பட்டினம் சரவணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ