சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை. !
சட்டப்பேரவை தேர்தல்
தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை: தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக டெல்லியில் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
தமிழகம், புதுவை, மே.வங்கம், கேரளம், அஸாம் தேர்தலுக்கான அட்டவணை அறிவிப்பது குறித்து இன்று ஆலோசனை நடத்த உள்ளது. ஏப்ரல் 20க்கு பின் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு, மே மாதம் வாக்கு எண்ணிக்கை இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பொறுப்பு ஆளுநர் இன்று பதவியேற்பு:
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக கேரள ஆளுநர் அர்லேகர் இன்று பதவியேற்கிறார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
