தமிழக அரசின் மருத்துவ கடைகள் எந்தெந்த இடங்களில் செயல்படுகிறது என்பது குறித்து தர்மபுரி உதவி மருந்து கட்டுப்பாடு இயக்குனர் அலுவலகத்தில் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்.!
கிருஷ்ணகிரி
தர்மபுரி உதவி மருத்துவ கட்டுப்பாடு இயக்குனர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்வரின் மருத்துவ கடைகள் எந்த, எந்த இடங்களில் செயல்படுகிறது என்பது குறித்து சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக அரசின் மருத்துவ கடைகள் எந்தெந்த இடங்களில் செயல்படுகிறது என்பது குறித்து தர்மபுரி உதவி மருந்து கட்டுப்பாடு இயக்குனர் அலுவலகத்தில் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர்.சந்திரமோகன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக மனு அளித்திருந்தார்.
இதனை அடுத்து தர்மபுரி மண்ட உதவி மருத்துவ கட்டுப்பாடு இயக்குனர் அலுவலகத்தில் நேரி சென்று அதற்கான கோப்புகளை பார்வையிட அதற்கான அடையாள அட்டையுடன் சென்று பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதனையடுத்து சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர்.சந்திரமோகன், தர்மபுரியில் உள்ள உதவி மருத்து கட்டுப்பாடு இயக்குனர் அலுவலகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக அரசின் முதல்வரின் மருந்துக்கடைகள் எத்தனை உள்ளது, எந்தெந்த இடங்களில் மருந்து கடைகள் செயல்படுகிறது. முதல்வரின் மருந்துக்கடைகள் என்ற பெயரில் வேறு யாராவது கடைகளை நடத்தி வருகிறார்களா என்றும் மாவட்டத்தில் இயங்கி வரும் மருந்து கடைகள் மூலம் எவ்வளவு மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான கோப்புகளை பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய டாக்டர் சந்திரமோகன் ......
தர்மபுரி உதவி மருத்து கட்டுப்பாடு இயக்குனர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்வரின் மருத்துவ கடைகள் எந்த, எந்த இடங்களில் செயல்படுகிறது என்பது குறித்து கோப்புகளை பார்வையிடப்பட்டது, தகவல் உரிமை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவல்கள் குறித்து கோப்புகளை பார்வையிட்டேன் இதில் ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும் முறையாக அனைத்து கோப்புகளும் முறையாக செயல்படுத்தப்பட்டு வருதாக தெரிவித்தார். மேலும் தமிழக அரசின் மருந்து கடைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்துக் கொள்ளும் வகையில் இன்னும் அதிக அளவில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது தர்மபுரி மண்டல மருத்துவ உதவி இயக்குனர் அதியமான், மருத்துவ ஆய்வாளர் திருமதி விஜயலட்சுமி, மற்றும் சமுக நுகர்வோர் அமைப்பை சேர்ந்த சரண்யா ராணி, கனகா, ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
