கிருஷ்ணகிரி கம்பன் கழகத்தின் சார்பாக சர்வதேச மகளிர் தின விழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கம்பன் கழகத்தின் சார்பாக சர்வதேச மகளிர் தின விழா.
விழாவின் துவக்கமாக மகளிர் அணி செயலாளர் மதுமொழி ஆனந்த் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கிருஷ்ணகிரி கம்பன் கழக தலைவர் மதிப்புறு முனைவர் இ. ரவிந்தர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மதிப்புறு முனைவர் ஜெ.பாலாஜி மற்றும் பொருளாளர் மு.ஸ்ரீரங்கன் முன்னிலை வகித்தார்கள்.
இதில் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் கனிமொழி, மற்றும் கிருஷ்ணகிரி தாலுக் காவல் நிலைய ஆய்வாளர் எம்.மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல குழுமம் உறுப்பினர் அ பன்னீர்செல்வம், கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர் மணிமேகலை மற்றும் ஜெகதேவி துரை மாடர்ன் பள்ளி தாளாளர் ம.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

மேலும் தனியுரையில் மகளின் மாண்பு என்ற தலைப்பில் கிருஷ்ணகிரி அரசு பெண்கள் கலை கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் ஜோதிமணி மற்றும் கிருஷ்ணகிரி சங்கர் மருத்துவமனை அரசு மகப்பேறு மருத்துவர் எழிலரசி ஆகியோர் சிறப்பாக பெண்களின் மேன்மை குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
இவ்விழாவை மகளிர் அணி செயலாளர் கி.சித்ரா மற்றும் ஹாஜிரா தொகுத்துக் வழங்கினார்கள். விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர்கள் வருகை புரிந்தனர். அதில் 45 மகளிர்க்கு வைரமங்கை விருது மற்றும் சான்றிதழும் அளித்து கௌரவப்படுத்தப்பட்டது.

விழா ஏற்பாடுகளை துணைத்தலைவர் சிங்காரவேலன், துணைத் தலைவர் மில்லட் இரா.முருகன், இணைச் செயலாளர் து.சிவக்குமார், துணைச் செயலாளர் ஜி கே சீனிவாசன், இணைச்செயலாளர் தட்ரஅள்ளி தமிழ்ச்செல்வன், இயக்குநர் சு. நாகராஜ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
விழா முடிவில் கம்பன் கழக செயலாளர் மதிப்புறு முனைவர் மருதம் க. அருள் அவர்கள் நன்றி உரை கூறினார்.
செய்தியாளர்
மாருதி மனோ
