பேருந்து சேவையினை நீட்டிப்பு செய்து கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் தற்போது இயங்கி வரும் நான்கு மகளிர் விடியல் பயணம் செய்யும் நகரப் பேருந்துகளை வழித்தடம் நீட்டிப்பு/மாறுதல் செய்து இயக்க உள்ள வழித்தடங்கள் 1.பேருந்து எண்- U௦9 ஊத்தங்கரை முதல் திருப்பத்தூர் செல்லும் பேருந்தினை காக்கங்கரை(வழி) பாப்பனூர், குன்னதூர் வழியாக நீட்டித்து இயக்குதல். 2. பேருந்து எண்- K60 & K66 கிருஷ்ணகிரி முதல் கீழ்பிக்கனப்பள்ளி செல்லும் பேருந்தினை கொத்தப்பள்ளி வரை நீட்டித்து இயக்குதல். 3. பேருந்து எண்- D23 & D23A தருமபுரி முதல் மல்லிக்கல் செல்லும் பேருந்தினை விளங்காமுடி வழியாக நீட்டித்து இயக்குதல். 4. பேருந்து எண்- K15 கிருஷ்ணகிரி முதல் மரிமானப்பள்ளி செல்லும் பேருந்தினை ஜீட்டிகானூர் வழியாக உள்சென்று இயக்குதல். கொடியசைத்து துவக்கி வைத்தல்.
தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அர.சக்கரபாணி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்.,MLA , கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சிதலைவர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப ஆகியோர் பேருந்தினை நீட்டிப்பு செய்து கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் புறநகர் கிளை மேலாளர் கிருஷ்ணகிரி கோட்ட மேலாளர், அரசு துறை சார்ந்த அலுவலகர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய,நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
செய்தியாளர்
மாருதி மனோ
