இந்திய அரசு விளையாட்டு மற்றும் இளையோர் அமைச்சகம் மை பாரத் கேந்திரா கிருஷ்ணகிரி மற்றும் கம்பர் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து நடத்திய தேசிய அறிவியல் தின விழா.!

கிருஷ்ணகிரி

இந்திய அரசு விளையாட்டு மற்றும் இளையோர் அமைச்சகம் மை பாரத் கேந்திரா கிருஷ்ணகிரி மற்றும் கம்பர் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து நடத்திய தேசிய அறிவியல் தின விழா.!

இந்திய அரசு விளையாட்டு மற்றும் இளையோர் அமைச்சகம் மை பாரத் கேந்திரா கிருஷ்ணகிரி மற்றும் கம்பர் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து நடத்திய தேசிய அறிவியல் தின விழா

இன்று  28.02.2026 இந்திய அரசு விளையாட்டு மற்றும் இளையோர் அமைச்சகம் மை பாரத் கேந்திரா மற்றும் கம்பர் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து நடத்திய தேசிய அறிவியல் தின விழா கிருஷ்ணகிரி மாவட்டம்,  காவேரிப்பட்டணம் தபோவனம்  ஸ்ரீ ராஜராஜேஸ்வரி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.

அதில் கம்பர் இளைஞர் நற்பணி  தலைவர் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் வரவேற்புரை நிகழ்த்த, கம்பர் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் மு.ஸ்ரீரங்கன்  விழாவை தொகுத்து வழங்கினார்.  நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீ ராஜராஜேஸ்வரி வித்யாலயா மெட்ரிக் பள்ளி தாளாளர் நாகேந்திரன், குழந்தை நல குழும உறுப்பினர் அ.பன்னீர்செல்வம் ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 

தேன் தமிழ் நாட்டியாலயா பள்ளி நிறுவனர் டாக்டர்  குரு மதுமொழி ஆனந்த், சீனிவாசா கல்வி அறக்கட்டளை  நிறுவனர் மதிப்புறு முனைவர் ஜெ.பாலாஜி, கேர் அறக்கட்டளை நிறுவனர் பாலமுருகன், பள்ளி முதல்வர் மதிப்புறு முனைவர் க அருள் உள்ளிட்டோர் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட அறிவியல் மாதிரிகள் செய்தனர். அதில் சிறப்பாக செய்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும் பரிசுகளும்  விருந்தினர்கள் வழங்கி மாணவர்களை கௌரவித்தனர்.

மேலும் விழா ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர் அருள்மொழி வேந்தன் செய்தார். விழா முடிவில் தேசிய இளையோர் சேவை .மணியரசன் நன்றி உரை கூறினார்.

செய்தியாளர் 

மாருதி மனோ